AVAILABLE NOW

சும்மா இருக்கக்
கத்துக்கணும்

Ideal guide for parents and teachers is now available from Abirami Pathipagam

Buy the book ₹450 · Order by phone or email
Front cover of சும்மா இருக்கக் கத்துக்கணும், showing a family looking over a sunset landscape
ROOTED IN CARE. MADE FOR FAMILIES.01 / 04

INSIDE THE BOOK

நூல் குறித்து

இந்நூல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானக் கையேடு.

குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் சீரான எதிர்காலத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட, 30 தலைப்புகள் கொண்ட நூல் இது. ஆசிரியர் வழங்கிய நூல் சுருக்கத்தில் இடம்பெறும் கருத்துகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

01 / 05

கருவும் ஆரம்பக் காலமும்

  • மனித உயிரைத் தோற்றுவிக்க ஆன்மீக வழியில் ஒரு அறிவியல் technique
  • நல்லதொரு கருவை உருவாக்கிட சில வழிமுறைகள்
  • உருவான கருவை, கருவிலேயே கருத்தோடு நல்வழிப்படுத்திட சில வழி முறை
02 / 05

உடல், மனம், மொழி

  • ‘நீங்கள் விரும்பிச் சாப்பிடுவது எல்லாமே உங்கள் உடம்புக்கு நல்லதுதான்.’ ஒவ்வொருவருடைய உடலின் மொழியும் தனித்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்லும், ‘உடலின் மொழி’ பகுதி
  • ஒவ்வொருவர் மனதிற்கும் ஒரு மொழி உண்டு. அந்த, மனதின் மொழி, நம் மூளையின் குரல் இரண்டையும் சிறப்பாகக் கையாண்டு வெற்றிப் பெறுவது எப்படி
  • உடலின் மொழி, மனதின் மொழி இவ்விரண்டையும், மந்திர தந்திர நம்பிக்கை கொண்டு கற்பது எப்படி என்பதையும் ‘உன்னை நீ நம்பு’ என்பதன் ஆழமானப் பொருளைப் பற்றியும் பேசுகிறது
  • உலகிய மொழிகளிலெல்லாம் சிறந்தது அவரவர் தாய் மொழி … என்பது எதனால்
  • ஓடிக் கொண்டே இருக்கும் உலகத்தில் குழந்தைகள் சும்மா இருக்க வேண்டிய அவசியம் என்ன? சும்மா இருக்க … ஏன் கற்றுக் கொள்ளனும். சும்மா இருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்.
03 / 05

வளர்ப்பு, கல்வி, வழிகாட்டுதல்

  • நம் எதிர்ப்பார்ப்புகளைக் குழந்தைகளின் மேல் திணிக்காமல், ஆசையாகச் சொல்வது எப்படி
  • குழந்தைகளுக்கு பாசத்தை மட்டும் கொட்டி வளர்க்காமல், பந்தம் கொள்ளச் செய்வது எப்படி
  • பிடிவாதம் என்பது மிகப் பெரிய வரம். குழந்தைகளின் பிடிவாத குணம் என்பது அவர்களின் வேகமான முன்னேற்றதிற்கு எப்படி உதவும்.
  • காந்தியம் என்பது எல்லா இடங்களிலும் பலன் தராது. நல்லவனாக இருப்பதோடு வல்லவனாக இருப்பதுவும் முக்கியம்.
  • பெரியவர்கள் ஒழுங்காக தேர்வு எழுதினால் தான் குழந்தைகள் காப்பி அடிக்க வசதியாக இருக்கும். பெரியவர்களே குழந்தைகளின் முன்னோடி
  • ஒரு திரைப்படத்தை எப்படி, எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்.
  • அறிவியல் முன்னேற்றம், நம் குழந்தைகளுக்குப் பலன் தரும் வகையில் பயன்படுத்த எப்படிக் கற்றுக் கொடுப்பது
  • கல்வியின் அவசியம் பற்றி, நம் முன்னோர் வாழ்ந்து வந்த வழி, விளக்கிக் கூறி உணர்த்த வேண்டும்
  • மனப்பாடம் என்பது நல்லதொரு ஒரு செயலே
04 / 05

பருவ மாற்றங்கள்

  • பருவத்திற்கு வரும் முன், முன் பருவ காலத்தை குழந்தைகளின் மனம் கோணாமல் கையாள்வது எப்படி ….
  • குழந்தைகளின் பருவ காலத்தில் தோன்றும் காரணமில்லா எரிச்சலையும், கோவத்தையும் கையாள்வது எப்படி …
  • இக்காலகட்டத்தில் குழந்தைகளின் பாலுணர்வைத் தூண்டுவது உணவா அல்லது சுற்றுச் சூழலா …
05 / 05

வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் உறவுகள்

  • சிறு வயதில் இருந்து சேமிக்கும் பழக்கத்தையும், 11-12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இயன்ற வகையில் பொருளீட்ட கற்றுக் கொடுத்தல் எப்படிப் பலன் தரும் என்பதையும் ……
  • பெரியவங்க சொன்னா கேட்டுக்கணுமா அல்லது நல்லது கெட்டது ஆராயணுமா?! இந்த ஆராய்ச்சி கல்லூரிக் காலத்திற்கு எப்படி உதவும் ..
  • பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, அக்கம்பக்க நட்பு பற்றிய அலசல். குழந்தைகள் கவனமாக, காயப்படாமல் இருக்க சில டிப்ஸ்
  • காதல் கசக்காமல், கண் கலங்க வைக்காமல் இருக்க நம் பிள்ளைகள் என்ன செய்யலாம்.
  • கல்லூரிப் படிப்பிற்கு அளவுக்கு மீறி கடன் வாங்கித் தன்னையும், தன் குடும்பத்தையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருக்க வழி
  • காதலர்கள் மற்றும் திருமணமான இளம் தம்பதியர்கள், உடலின் மொழி சொல்வதைக் கேட்டு நடந்தால் Break up ஆகாமலும், விவாகரத்து ஆகாமலும் தப்பித்துக் கொள்ளலாம்.
  • காதலில் விழுந்து கரு உருவாவது கூடச் சரியென்பேன் …. அனாதை என்று யாரும் இவ்வுலகில் இருக்கக் கூடாது என்று வேண்டிக் கேட்கிறது இந்நூல்.
  • குழந்தைகள் மது, புகைப்பிடித்தல், கஞ்சா போன்ற போதை பொருட்கள் அருகில் கூட செல்லாமல் தடுக்க …….. என்ன வழி ….
Portrait of KalyaniSridhar

ABOUT THE AUTHOR

KalyaniSridhar

இந்நூலாசிரியர் ஆன எனக்கு 15 வருடம் ஆப்பிரிக்கா வாழ் இந்திய மக்களின் குழந்தைகளுக்கு பள்ளி நடத்திய அனுபவம் உண்டு. கிட்டதட்ட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநில பிள்ளைகளுக்கும் கல்வி கற்பித்த அனுபவம் உண்டு.

— KalyaniSridhar

BOOK REVIEW

A review of the book.

Scanned Tamil review of சும்மா இருக்கக் கத்துக்கணும்

GET YOUR COPY

Bring the book home.

To purchase சும்மா இருக்கக் கத்துக்கணும், call or email KalyaniSridhar.

BOOK PRICE ₹450
CALL TO ORDER +91 7338870021
Ordering in bulk?

Special pricing is available upon request. Call or email to enquire.